காரில் குழந்தைகளுடன் பிரயாணம் செய்தல்

7வயதிலும் குறைந்த அனைத்துச் சிறுவர்களும் காரில் பயணம் செய்யும்போது குழந்தைத் தடுப்பு ஆசனத்தைக் கட்டாயம் பாவிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய சட்டம் வேண்டுகிறது. இது கார் மோதலில் சம்பந்தப்படும்போது குழந்தையைக் காயப்படாமல் காப்பாற்றுவதற்காகும்.

எவ்வகையான தடுப்பு ஆசனம் தேவைப்படும் என்பது குழந்தையின் வயதையும், உருவத்தையும் பொறுத்ததாகும். இந்தத் தடுப்பானது குழந்தைக்குப் பொருத்தமான அளவாக இருப்பதுடன், ஒழுங்காக சரிசெய்யப்பட்டும், கட்டப்பட்டும் அத்துடன் வாகனத்துடன் சரிவரப் பொருத்தப்பட்டும் இருக்கவேண்டும்.

0-6 மாதங்கள் வயதான குழந்தைகள்

பின்பக்கமாக நோக்கிய தடுப்பில் பயணிப்பது அவசியம். அந்த பாதுகாப்பு தடுப்பாசனம் பின் ஆசனத்தில் இருக்கவேண்டும் - முன் ஆசனம் அல்ல.

6 மாதங்களிலிருந்து 4 ஆண்டுகள் வயதான சிறுவர்கள்

 • அவர்களின் பருமனைப் பொறுத்து பின்பக்கம் நோக்கிய தடுப்பில் அல்லது முன்பக்கம் நோக்கிய கார் ஆசனத்தில் நாடாக்களால் கட்டப்பட்டுப் பயணம் செய்யலாம். குழந்தை தடுப்பில் இருந்தபடி பின் இருக்கையில் மாத்திரம் பயணிக்கவேண்டும்-முன் ஆசனம் அல்ல.
 • எட்டு (8) வயது வரையான சிறுவர்களுக்கான தடுப்புக்களுடன் இணைக்கப்பட்டபடி இப்பொழுது கிடைக்கும்.

வயது 4 இலிருந்து ஆகக்குறைந்தது 7 ஆண்டுகள் வரையான சிறுவர்கள்

 • அவர்களுடைய உருவத்தைப் பொறுத்து, முன்னோக்கிய கார் ஆசனத்தில் அல்லது booster ஆசனத்தில் பயணம் செய்யலாம். Booster ஆசனங்கள் குழந்தையை சரியான மட்டத்திற்கு உயர்த்துவதால், ஆசனப்பட்டி பொருந்தும்.
 • 7 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் பின் ஆசனம் முழுவதையும் பாவித்தால், 4 -7 ஆண்டுகள் வயதுடைய சிறுவர்கள் மாத்திரம் முன் ஆசனத்தில் பயணிக்கலாம் (boosterஆசனத்தைப் பயன்படுத்தி).
 • மேலே சங்கிலிப் பட்டி மற்றும் முதுகு பொருந்தக்கூடிய boosterஆசனங்கள் ஏனைய booster ஆசனங்களைவிடப் பாதுகாப்பானவை.
 • குழந்தைகள் 145 செ.மீ உயரமாகும் வரை, ஒரு booster ஆசனத்தில் அமரவேண்டும். அவர்கள் விரைவில் வயதுவந்தோர்க்கான ஆசனப்பட்டிக்குப் போனால், விபத்து ஒன்று ஏற்படும்பட்சத்தில் அவர்கள் காயப்படவேண்டிய பெரிய ஆபத்துக்கு ஆளாவர்.

தடுப்பாசனத்தைப் பொருத்துதல்

குழந்தைக் காப்பு ஆசனத்தை அல்லது booster ஆசனத்தை உங்கள் வாகனத்தில் பொருத்தும்போது எப்பொழுதும் தயாரிப்பாளரின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கவேண்டும்.

4 ஆண்டுகளுக்குக் குறைவான வயதுடைய சிறுவர்களுக்கான காப்பு ஆசனத்தைப் பொருத்துவதென்பது:

 • ஆசனப்பட்டியை குறிப்பிடப்பட்டுள்ள துவாரத்தினூடாக செலுத்தி அதனை இறுகக் கட்டுவதன்மூலம காப்பு ஆசனம் காருடன் பொருத்தப்படுகிறது.

4 ஆண்டுகளுக்கும் கூடிய வயதுடைய குழந்தைகள் விசையால் அசையும் ஆசனங்களில் பிரயாணம் செய்தல்.

 • அங்கே ஒரு சங்கிலிப் பட்டி இருந்தால், அதைக் காருடன் பொருத்தவும்.
 • ஆசனப்பட்டி குழந்தையைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
 • மேலே ஒரு சங்கிலி நாடா காரில் கொழுவப்பட்டுள்ளது.

ஒரு தடுப்பு ஆசனத்தைத் தெரிவுசெய்தல்

ஆஸ்திரேலிய பாதுகாப்புத் தரமுடைய (AS/NZS 1754) குழந்தைக் காப்பு, booster ஆசனங்கள் மட்டும்தான் பாவனைக்காக அனுமதிக்கப்படுகின்றன. அதாவதுஏனைய நாடுகளிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டுவரப்பட்ட கார் ஆசனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

பாவித்த காப்பு ஆசனங்கள் அல்லது booster, பழுதடைந்தும், பாதுகாப்பில்லாமலும் இருக்கக் கூடுமாதலால், அவற்றைப் பாவிபதனை விலக்க முயற்சிக்கவும்.

 • நாடாக்களால் இறுக்கிக் கட்டுவது குழந்தையை booster இல் பிடித்து வைத்திருப்பதற்காக வாகும்.

குழந்தைப் பாதுகாப்பு இருக்கையைப் பாவிக்காது விட்டால், பாரிய தண்டப்பணம் அத்துடன் உரிம மதிப்பிறக்கப் புள்ளிகள் வரும். சரியாக தடுப்புச் செய்யாது விட்டால், இந்த அபராதம் காரில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் ஏற்புடையதாகும்.